search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணக்குள விநாயகர் கோவில்"

    • விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
    • மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி திதியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். அதன்டி இன்று அனைத்து விநாயகர் கோவில்களிலும் மஹா சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

    கோவிலில் வெளி பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கூட்ட நெரிச்சலை தவிர்க்க மூலவருக்கு அர்ச்சனை செய்யாமல் உற்சவருக்கு மட்டும் வெளியே அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு இடைவிடாத அன்னதானம் வழங்கப்படட்டது.

    ஜப்பான் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஆன்மீக குழுவினர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வருவர். 25 பேர் கொண்ட ஜப்பான் நாட்டு ஆன்மீக குழுவினர் விநாயகர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் மணக்குள விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

    ஜப்பான் நாட்டு குழுவினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்யப்பட்டது. 

    • ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
    • மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிலர் தேங்காயை வீசி உடைத்ததை பார்த்து அதிசயித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் புதுவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் மணக்குள விநாயகர் கோவிலில் வழிபடுவார்கள்.

    இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்தனர். பின்னர் மணக்குள விநாயகர் கோவிலை சுற்றி பார்த்தனர்.

    அப்போது மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிலர் தேங்காயை வீசி உடைத்ததை பார்த்து அதிசயித்தனர். அவர்களிடம் ஸ்பெயின் நாட்டினர் எதற்காக இவ்வாறு தேங்காய் வீசி உடைக்கிறீர்கள் என்று இருந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு, தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்வதாக தெரிவித்தனர்.

    இதைக்கேட்டு வியந்த ஸ்பெயின் நாட்டவர்கள் அருகில் உள்ள கடையில் தேங்காய்களை வாங்கி உடைத்து வழிபட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    • இன்று முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.
    • 23-ந்தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

    மணக்குள விநாயகர் கோவிலின் 62-வது பிரம்மோற்சவ விழா நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.

    9-ந் தேதி காலை 7 மணிக்கு ரதோற் சவம், தொடர்ந்து கன்யா லக்னத்தில் திருத்தேர் வீதியுலா நடக்கிறது.

    10-ந் தேதி காலை நர்த்தன கணபதி நேரடி உற்சவம், பவுர்ணமி கடல் தீர்த்தவாரி வெள்ளி மூஷிக வாகன சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.

    11-ந் தேதி காலை 11 மணிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம், 15-ந் தேதி காலை கிருத்திகை, இரவு பால சுப்ரமணியர் உற்சவம், வெள்ளி மயில் வாகன வீதி உலாவும் நடக்கிறது.

    விழாவில் 17-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும், 18-ந் தேதி விடையாற்றுதல் உற்சவமும், 22-ந் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது.

    விழாவில் 23-ந் தேதி மதியம் உற்சவ சாந்தி நிகழ்ச்சியும், 108 சங்காபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் தேவஸ்தான அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

    • செப்டம்பர் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தினமும் காலை, இரவு சாமி வீதி உலா நடக்கிறது.
    • 23-ந்தேதி மதியம் உற்சவ சாந்தி நிகழ்ச்சி, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

    புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் 62-வது பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சாமி வீதி உலா நடக்கிறது.

    9-ந் தேதி காலை 7 மணிக்கு ரகோத்சவம், 10-ந் தேதி காலை வர்த்தன கணபதி நேரடி உற்சவம், பவுர்ணமி கடல் தீர்த்தவாரி வெள்ளி மூஷிக வாகன சாமி வீதி உலாவும் நடக்கிறது. 11-ந் தேதி பகல் 11 மணிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

    15-ந் தேதி காலை கிருத்திகை, இரவு பால சுப்ரமணியர் உற்சவம், வெள்ளி மயில் வாகன வீதி உலாவும், 17-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும், 18-ந் தேதி விடையாற்றுதல் உற்சவமும், 22-ந் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது.

    23-ந் தேதி மதியம் உற்சவ சாந்தி நிகழ்ச்சி, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் தேவஸ்தான அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

    முதல்- அமைச்சர் நாராயணசாமி பிறந்த நாளை புதுவை மாநில காங்கிரசார் மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து கொண்டாடினர்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமிக்கு இன்று பிறந்தநாள். 1947-ம் ஆண்டு மே 30-ந்தேதி பிறந்த அவருக்கு இன்றோடு 72 வயது பூர்த்தியாகிறது. நாராயணசாமியின் பிறந்த நாளை புதுவை மாநில காங்கிரசார் மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடினர்.

    மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் நாராயணசாமி நீடூழி வாழ வேண்டும் என வேண்டி தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

    மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், காங்கிரஸ் துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கருணாநிதி, தனுசு,

    நிர்வாகிகள் சிவ. சண்முகம், சரவணன், காசிலிங்கம், உமாசங்கர், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் ஞானசேகரன், ராதா ரெட்டியார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    பிறந்தநாளையொட்டி பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினர். இதேபோல புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் வட்டார காங்கிரஸ் சார்பில் கோவில்களில் விசே‌ஷ பூஜை, அபிஷேகம் போன்றவை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கினர். முதியோர் இல்லம், மன வளர்ச்சி குன்றியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றிலும் மதிய உணவு வழங்கினர்.

    புதுவை மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவின் 4ம் ஆண்டையொட்டி, சகஸ்கர சங்காபிஷேக விழா நாளை (20-ந்தேதி) நடக்கிறது.
    புதுவை மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவின் 4ம் ஆண்டையொட்டி, சகஸ்கர சங்காபிஷேக விழா நடக்கிறது. 20-ந்தேதி மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாகசாலை, முதல்கால யாக பூஜை நடக்கிறது. 21-ந்தேதி காலை 7.30 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு யாத்ரா தானம், கலச புறப்பாடு நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு 1008 சங்காபிஷேகம், உற்சவ மூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு உற்சவ மூர்த்தி வீதியுலா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அதிகாரி வெங்கடேசன் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
    அமைச்சர் கந்தசாமி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.
    பாகூர்:

    அமைச்சர் கந்தசாமி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். முதலியார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நாளை காலை அவரது தாயார் ராசாம்மாளிடம் ஆசி பெறுகிறார். அங்கிருந்து கிருமாம் பாக்கம் செல்கிறார். அங்கு கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்கிறார். பின்னர் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன் பிறகு ஏம்பலம் தொகுதி முழுவதும் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கிறார். சிறப்பு அன்னதான நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடக்கின்றன.

    ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர் பாலமுரளி ஏற்பாட்டில் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது. புதுவையில் குழந்தைகள் ஆஸ்பத்திரி மற்றும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. ஜிப்மரில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை ஏம்பலம் தொகுதி காங்கிரசார் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
    ×